அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும், தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விருத்தாச்சலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சென்னை, எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றனர்