ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன்” என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போல் தரம் குறைக்கும் வகையில், மாநிலங்களவையில் ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதாவினை திமுக சார்பில் எதிர்த்ததைத் தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செவ்வாய்க்கிழமை (8-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.