திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இடிந்த விழுந்த கோபுரம் மட்டுமன்றி, இக்கோயிலில் உள்ள 21 கோபுரங்களையும், ஆய்வு செய்து கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையையும் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்” என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஒட்டுமொத்தமாக இந்த ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கின்ற 21 கோபுரங்களையும் என்ஐடி ஆய்வு மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இங்குள்ள கோபுரத்தை என்ஐடி ஆய்வு செய்து, அதன் அறிக்கையை ஓரிரு நாட்களில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.