அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா இன்று (ஆக.4) மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் வந்த அன்வர் ராஜா கடந்த 2021 டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த 2021 டிசம்பர் 1 ஆம் தேதி இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படும் நிலையில் அதிமுக தனது பலத்தை நிரூப்பிக்க உள்ளூரில் செல்வாக்கு பெற்ற அன்வர் ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.