மணிப்பூரில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்ற வன்முறையில் ஒரு கும்பல் பழங்குடியினப் பெண்களை ஆடையின்றி இழுத்துச் சென்ற வீடியோ நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முந்தைய நாள் வெளியானதன் பின்னனியில் சதி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஜூலை 19-ம் தேதி மணிப்பூரில் இரண்டு இளம் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் இருந்த இளம்பெண்கள் குகி இனத்தவர் என்பதும் அவர்களை இழுத்துச் சென்றவர்கள் மைத்தேயி இனத்தவர் என்பதும் தெரியவந்தது. மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் சூழலில் இந்த வீடியோ வெளியான தருணத்தின் பின்னணியில் சதி இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.