ட்விட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மாற்றிவிட்டார், அதன் உரிமையாளர் எலான் மஸ்க். புதிய லோகோவான ‘X’ உள்ளேயும், பழைய லோகோவான ‘நீலக் குருவி’ வெளியேயும் சென்றுள்ளது. இதற்கு எதிர்வினையை எலான் மஸ்க் சந்தித்து வருகிறார்.
ட்விட்டரின் லோகோவை X என மாற்றியதன் பின்னணியில் பலமான வர்த்தக ஐடியாவை மஸ்க் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், தனது வியாபார மூளையை மஸ்க் தெளிவாக பயன்படுத்தி திட்டமிட்டுள்ளாராம். இதன்மூலம் தனது X கார்ப்பரேஷன் சேவைகளை மஸ்க் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக ட்விட்டர், பேபால் (நிதி சேவை) மற்றும் இன்னும் பிற விஷயங்களை ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் அவரது திட்டம் என சொல்லப்படுகிறது.