மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் தொடக்க நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இம்முகாமில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், பள்ளி வளாகத்திலேயே மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், விண்ணப்பங்கள் அளிக்க வரும் மகளிருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.