நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.
• ஜூலை 28ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
• ஜூலை 28ம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை பொது கலந்தாய்வு நடைபெறும்
• ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ம் தேதி வரை 2-ம் சுற்று கலந்தாய்வு நடைபெறும்
பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1,78,959 பேர் விண்ணப்பித்துள்ளனர். காலியிடங்கள் இல்லாத அளவிற்கு அனைத்து இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். (ECE Advanced Technology, ECE Design and Technology) ஆகிய 2 புதிய படிப்புகள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டு வேறு படிப்புக்கு கல்லூரி மாறினால் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும். வரும் 21-ம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக பாடத்திட்டம் தொடர்பாக துணைவேந்தர்களுடன் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.