கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனி 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார் . இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தோனி தனது பிறந்தநாளை செல்லப்பிராணிகளுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.