இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
இதையொட்டி இரு அணியினரும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.