பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால் அது பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு பலம் சேர்க்கும் என்று பா.ஜனதா தலைவர்கள் கருதுகின்றனர். இதையடுத்து, பெங்களூருவில் 17 சட்டசபை தொகுதிகளில் வேட்பாளர்களை கவரும் விதமாக இன்றும், நாளையும் என 2 நாட்களில் ஒட்டு மொத்தமாக 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல உள்ளார்.
19 சட்ட விதிகளின்படி அமைதியான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி உள்ளது. ‘நீட்’ தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிவரை நடக்கிறது. அன்றைய தினம் பிரதமரின் ஊர்வலம் 11.30 மணியளவிலேயே முடிந்து விடும். அதனால் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும். இதையடுத்து, பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ஊர்வலத்தின் போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் முன் எச்சரிக்கையாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.சுமார் 5 ஆயிரம் போலீசார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.