காஞ்சிபுரம் : காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளாகிய பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு குழுமம் , வங்கிப்பணியாளர் தேர்வுக்குழுமம் உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற தேவையான இலவச பயிற்சி 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அரசுப்பணிக்கு தயாராகிவரும் காஞ்சீபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண் 044-27237124 வாயிலாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரினை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.