பனாஜி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று கோவா வந்தடைந்தார். 12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.