சென்னை : தங்கம் விலை இந்த ஆண்டில் இதுவரையில் அதிக பட்சமாக சவரனுக்கு 728 அதிகரித்து ரூ.45,648 விற்பனையானது. இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,750-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,696-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.00 உயர்ந்து ரூ.82.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.82,800-ஆக இருக்கிறது.