day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து இன்று ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின்

காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து இன்று ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அரசு அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!