சென்னை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியதாவது :- “அரசுத்துறைகளில் அதிகளவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காததால், நாளுக்கு நாள் லஞ்ச லாவண்யம் மலிந்து வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தின் மீதான பயத்தை காட்டினால் தவிர, அரசுத்துறைகளில் ஊழலை கட்டுப்படுத்த முடியாது. எனவே, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்துள்ளார்.