சென்னை : சென்னை தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான கடைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களை சீரழிக்கும் வகையில், தானியங்கி மூலம் மதுபான விறபனையை துவக்கி உள்ளதாக விமர்சித்துள்ள அவர், தானியங்கி மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் . தானியங்கி மது விற்பனை கண்டத்திற்குரியது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.