புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சிவாங்கி சிங். இவர் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்து, இந்திய படைக்கு சொந்தமான ரபேல் விமானத்தை இயக்க பயிற்சி பெற்றார். இதன் மூலமாக முதல் இந்திய பெண் ரபேல் விமானி என்ற பெருமையை பெற்றார்.
இதனையடுத்து, பிரான்சில் நடைபெற உள்ள போர் விமானங்கள் பயிற்சியில் சிவாங்கி சிங் பங்கேற்க உள்ளார். இந்தியாவை சேர்ந்த சிவாங்கி சிங் உள்ளிட்ட விமானிகள் 17 பேர் கலந்து கொள்கிறார்கள். சிவாங்கி சிங்கிற்கு புதிய வகை ரபேல் ஜெட் விமானம் இயக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.