சென்னை : சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், களமிறங்கிய ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. ஆனால்கடைசி 10 ஓவர்களில் அந்த அணியால் மேற்கொண்டு 58 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 135 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு138 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிஎஸ்கே தனது 4-வது வெற்றியை பதிவி செய்துள்ளது.