டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களே எடுத்தது. இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இறுதியில், 19.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் டி20 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.