day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு : முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு : முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டின் பெள சென் (Pou Chen) குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.2302 கோடி முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட்-உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில், காலணிகள் உற்பத்திக்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வரின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை (Capital intensive high-tech industries) ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் (Employment intensive) ஈர்த்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இத்திட்டம் அமைக்கப்படுவதன் மூலமாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதுமட்டுமின்றி, ஏற்கெனவே, காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு, தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!