day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

75 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு : உத்தர பிரதேசம்

75 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு : உத்தர பிரதேசம்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி அத்தீக் அகமது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றிரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி காவல் துறை தலைவர் ராஜ்குமார் விஸ்வகர்மா, முதன்மை செயலாளர் சஞ்சய் பிரசாத், காவல் துறை சிறப்பு டி.ஜி. பிரசாந்த் குமார் ஆகியோர் சிறப்பு விமானத்தில் லக்னோவில் இருந்து நேற்று பிரயாக்ராஜ் சென்றனர். அத்தீக் அகமது மற்றும் அவரது தம்பி கொலை குறித்து 3 பேரும் நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர்.

காவல் துறை தலைவர் ராஜ் குமார் விஸ்வகர்மா கூறும்போது:- “சமூக வலைதளங்களில் வன் முறையை தூண்டும் பதிவுகளை வெளியிடுவோர், சாலை, தெருக் களில் வெறுப்புணர்வை தூண்டும் பதாகைகளை ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரயாக்ராஜ் மட்டுமன்றி அயோத்தி, வாரணாசி, மதுரா உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக உத்தர பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. பிரயாக்ராஜ் உட்பட பதற்றமான பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேசம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!