ஹமிர்பூர்: இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (சாய்) வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாட்மிண்டன் அரங்கம், ஜூடோ அரங்கம் உள்ளிட்டவற்றை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது :- ஹமிர்பூரில் உள்ள சாய் மையத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய செயல்திறன் மையம் (என்சிஓஇ) விரிவுபடுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இதற்காக ரூ.3,200 கோடியை கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். இளம் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பயிற்சி பெற்று சர்வதேச தரத்துக்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.