சென்னை : தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று (வியாழக்கிழமை) கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழக்கமாக தினந்தோறும் 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.