day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை 500 சிறப்பு பஸ்கள் இயக்கம் : போக்குவரத்துத்துறை தகவல்

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை 500 சிறப்பு பஸ்கள் இயக்கம் : போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை : கோடை விடுமுறை, பண்டிகை காலம், விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வருவதால் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது. 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை சென்னையில் இருந்து நாளை 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 13-ந்தேதி (நாளை) 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!