day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தொப்பையைக் குறைக்கலாம் ஈஸியா! – சங்கீதா

தொப்பையைக் குறைக்கலாம் ஈஸியா! – சங்கீதா

 

நம்மில் பலருக்கு அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து தொப்பை போட்டுவிடுகிறது. இது நிறைய பெண்களுக்குச் சற்று வித்தியாசமான உடல் அமைப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும்.

இப்படி ஏற்படும் தொப்பைக்கு என்ன காரணம் என்ற கேள்வி நமக்கு ஏற்படுவது இயல்பே. Belly fat  எனும் வயிற்றுக் கொழுப்புதான்  இந்தத் தொப்பைக்குக் காரணம். தேவைக்காகக் கொழுப்புச் சத்து நம் உடல் உறுப்புகளில் சேர்த்துவைக்கப்படும். இந்த வேலையைச் சரிவரச்செய்வது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். இந்த ஹார்மோன் கொழுப்புச்சத்தை கைகள், தொடை மற்றும் அடிவயிற்றுப்பகுதியில் சேமித்துவைக்கும்

மாதவிடாய் நின்றுவிட்டவர்கள் (மெனோபாஸ்) மற்றும் கருப்பை நீக்கம் செய்தவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் குறைபாடு ஏற்படுவதால் வயிற்றுப்பகுதியில்  கொழுப்பு அதிகமாகத் தங்கிவிடுகிறது. இந்தத் தொப்பைக் கொழுப்பால் பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படக்கூடும். இந்த வகை தொப்பைக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பதைச் சரிசெய்வதாலும், அதிகக் கொழுப்பை நீக்கச் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதாலும் தொப்பையைக் குறைக்கலாம்.

இந்தத் தொப்பையின் அளவு, மிதமானது முதல் அதிகமானதுவரை இருக்கும். இதன் அளவைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை உண்டு. நேராக நின்றுகொண்டு கால்களைச் சமமாக வைத்து, தலையைச் சற்று குனிந்து, மூச்சை  முடிந்த அளவு  உள்ளிழுத்து நமது கால் கட்டை விரலை நம்மால் பார்க்க முடிகிறது என்றால் அது மிதமான அளவு தொப்பை என்று எடுத்துக்கொள்ளலாம்அவ்வாறு செய்யும்போது கட்டை விரல்களை நம்மால் பார்க்க முடியவில்லை என்றால் அது சற்று அதிக தொப்பை

தொப்பையையும் கொழுப்பையும் எப்படிக் குறைப்பது?

தொப்பையைக் குறைக்கும் முறைகளில் முதலில் நாம் கவனிக்க வேண்டியது உணவுமுறை. எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்த உணவுகளான  வாழைப்பழம், கேரட், காலிஃபிளவர், பாசிப்பயிறு என நிறைய உணவு வகைகள் உள்ளன. நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கலோரி உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்திக் கொழுப்பு தங்குவதைக் கட்டுப்படுத்தும். அதிக புரதச்சத்து உள்ள உணவு வகைகளை உண்ணுவதும், தேங்காய் எண்ணெயில் சமைப்பதும் தொப்பைக் கொழுப்பைக் கட்டுப்படுத்தும்

உணவு வகை மாற்றங்கள் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்குச் சில எளிய பயிற்சிகளைச் செய்யலாம். Tummy Tucking Excercise என்பது அவற்றில் ஒன்று

முதலில் நன்கு மூச்சு விட்டுக்கொண்டு, பின் மூச்சை உள்ளிழுக்கும்போது  அதனுடன் சேர்ந்து வயிற்றுப் பகுதியையும் ரிலாக்ஸ்  செய்துவிடலாம். இவ்வாறு ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலையில் 10-20 முறை செய்யலாம். மேலும், abdominal  exercise என்பது போன்ற எளிய பயிற்சிகளும் பயனளிக்கும்

தொப்பைக்கு இன்னொரு காரணமும் உண்டு. மகப்பேறு ஒரு பெண்ணின் உடலிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அந்த மாற்றங்கள் பிரசவத்திற்குப் பிறகும் நீடிக்கும். நமது உடலில் அதிகக் கொழுப்பு சேரும் இடங்களில் வயிற்றுப்பகுதி முதன்மை வகிக்கிறது . கர்ப்ப காலங்களில் வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகள் அதிகமாக விரிவடைகின்றன. இதனால், ஓமெண்டம் விரிவடைகிறது. ஓமெண்டம் என்பது வயிற்றுத் தசைகளின் கீழும் குடல் மற்றும் உள்ளுறுப்புகளின் முன்பக்கத்திலும் உள்ள ஒரு மடல். தசைகள் மற்றும் ஓமெண்டம் அதிகமாக விரிவடைந்தால் , வயிற்றுப்பகுதியின் சுற்றளவு அதிகமாகி இன்னும் அதிகப்படியான கொழுப்பைப் படியவைக்கிறது.

கர்ப்ப காலத்தில் கீழ்முதுகுப் பகுதியின் வளைவு அதிகமாகி, இடுப்பு எலும்பை முன்பக்கமாகத் திருகுகிறது. இதனால், கீழ்முதுகுப் பகுதியின் தசைகள் இறுக்கமாகவும், வயிற்றுப்பகுதியின் தசைகள் விரிவடைந்து பலம் இழந்தும் காணப்படுகின்றன. இதனால், கொழுப்பு படிவது மட்டுமல்லாமல் டயஸ்டாஸீஸ்  ரெக்டை (diastasis recti) என்னும் நிலை ஏற்படுகிறது

டயஸ்டாஸீஸ்  ரெக்டை எனப்படுவது வலது மற்றும் இடது வயிற்றுச் சுவர் தசைகளுக்கு இடையில் உள்ள  இடைவெளி. இது கர்ப்ப காலத்தில் விரிவாகும். கருப்பைக்கு இடமளிக்கும் வகையில் தாயின் ஹார்மோன் அளவில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக லீனியா ஆல்பா ( Linea Alba ) என்னும் இணைப்புத் திசு அதன் கடினத்தன்மையை இழந்து மென்மையாவதே இதற்குக் காரணம். இதனால், உள்ளுறுப்புகள் தனது கவசத்தை இழக்கின்றன. 60 சதவீதப் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் பெண்களுக்கு இருமல், தும்மல் போன்ற நேரத்தில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

டயஸ்டாஸீஸ்  ரெக்டை பிரச்சினைக்கு பிசியோதெரபி பயிற்சிகள் மூலம் வலுவிழந்த சதையை வலுப்பெறச் செய்யலாம். abdominal corset எனும் பெல்ட் அணிவதன் மூலமும் நல்ல பயன் கிடைக்கும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!