புதுடெல்லி: டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார். இந்நிலையில், எலான் மஸ்க்கை 13.43 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அதேநேரம் எலான் மஸ்க், பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட 195 பேரை பின் தொடர்கிறார்.
ட்விட்டர் பயனாளரான மோன்ட்டி ரானா, “மோடிக்கும் எலான் மஸ்குக்கும் என்ன தொடர்பு என காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்காது என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், டெஸ்லா நிறுவனம் கார் தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்கப் போகிறதா? என பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடர்பவர்களைக் கொண்டவர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.