அகமதாபாத் : குஜராத், கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களைக் குவித்தது.
பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. 155 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங்கும், உமேஷ் யாதவும் அபாரமாக விளையாடினர். கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டன. பின்னர் ரிங்கு சிங் அடுத்த 5 பந்துகளையும் சிக்ஸரை விளாசியதால் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அதே நேரத்தில் குஜராத் அணி முதல் தோல்வியைப் பெற்றுள்ளது.