சென்னை: 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. பள்ளியில் படித்த மாணவர்கள், தனித் தேர்வர்கள் என 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதினார்கள். 5 லட்சத்து ஆயிரத்து 28 மாணவர்களும், 4 லட்சத்து 75 ஆயிரத்து 56 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். சிறைச்சாலைகளில் உள்ள 264 கைதிகளும், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் இத்தேர்வை எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 12,639 பள்ளிகள், 4025 மையங்கள் மற்றும் 182 தனித்தேர்வர்களுக்கான மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னை புழல் உள்ளிட்ட 9 ஜெயில்களிலும் கைதிகள் தேர்வு எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி 20-ந்தேதியுடன் நிறைவடைகின்றது. தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இடைநின்ற மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.