சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில்:- “8 மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப முதல்வர் இது தொடர்பாக முடிவு எடுப்பார்” என்று தெரிவித்தார்