அகமதாபாத் : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துளள்ளனர்.