பள்ளி முடிந்து தனது அம்மாவுக்கு உதவி செய்வதற்காக பியூட்டி பார்லருக்கு வந்து சென்ற ரேகா வெங்கடேசன், இன்று சென்னையின் தலைசிறந்த அழகுக்கலை நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ரூ.1,500-இல் தொடங்கிய இவரது மாத ஊதியம் ரூ.80,000 வரை உயர்ந்ததோடு இன்டர்னேஷனல் சலூன் ஒன்றில் ஊழியர்களுக்குப் பயிற்றுநராகவும் பணி செய்திருக்கிறார். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரேகா வெங்கடேசன் எளிய குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரது அம்மா 1995ஆம் ஆண்டு சிறிய அளவில் பியூட்டி பார்லர் தொடங்கி நடத்தி வந்தபோது ரேகா தனது அம்மாவுக்கு உதவியாக இருந்திருக்கிறார். மேலும், பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில் தனது அம்மாவின் பியூட்டி பார்லருக்குச் செல்லத் தொடங்கிய ரேகா, அங்கு திரெட்டிங் செய்வதில் தனது தொழில் பயணத்தை தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரேகாவின் அம்மாவிடம் உங்களை விட உங்கள் மகள் சிறப்பாக திரெட்டிங் செய்கிறார் எனக் கூறி ரேகா பள்ளி முடிந்து வரும் வரை காத்திருந்து அலங்கரித்துச் சென்ற நிகழ்வெல்லாம் நடந்திருக்கிறது. 8ஆம் வகுப்பு படிக்கும்போதே ரேகாவுக்குத் தனியாக க்ளையன்ட்ஸ்
வரத்தொடங்கிவிட்டார்கள். இனி அழகுக் கலை துறைதான் தனது எதிர்காலம் என அப்போது முடிவெடுத்த ரேகா, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழு நேரமாகத் தனது அம்மாவின் பியூட்டி பார்லரைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். இதனிடையே ரேகாவுக்கு வீட்டில் திருமணம் செய்துவைத்துவிட, அதற்குப் பிறகு பியூட்டி பார்லரைத் தொடர்ந்து நடத்துவதில் குடும்பத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால் கவின்கேர் நிறுவனத்துக்குச் சொந்த மான கிரீன் டிரெண்ட்ஸ் லைம் லைட் சலூனில் ரூ.1500-க்கு 2005ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் அங்கு தனது திறமை களை மேலும் மெரு கேற்றிக்கொண்டார். பத்தாம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்திய ரேகா, இன்று ஆங்கிலத்தில் சரளமாகப் புகுந்து விளையாடுகிறார். ரேகா வெங்கடேசனின் திறமையும், நுட்பமான ஒப்பனையும் அவருக்கு இன்டர்நேஷனல் நிறுவனமான டோனி அன் கய் சலூனில் வாய்ப்பு பெற்றுக் கொடுத்தது. மென் பொறியாளர் பெறும் ஊதியத்திற்கு இணையாக மாதம் ரூ.80,000 ஊதியம் வழங்கி ரேகாவைப் புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு பயிற்றுநராக பணியமர்த்தியது அந்நிறுவனம். இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த நிறுவனத்தில் ரேகாவுக்கு நாளுக்கு நாள் பாராட்டு அதிகரித்தது. பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ரேகா பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் புகுந்து விளையாடும் வகையில் தன்னை வளர்த்துக்கொண்டார். இந்நிலையில் இனி சொந்தமாக சலூன் திறந்து அதைத் தனது தாயார் நினைவாக நடத்த வேண்டும் என்பதற்காகத் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இப்போது அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் யார் தயவுமின்றி பெண்கள் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு அப்பாற்பட்டு பிற நகரங்களிலும் அழகுக்கலை குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தவிருக்கிறார் ரேகா வெங்கடேசன். சொந்தமாக சலூன் திறப்பதற்கான முயற்சி செய்து வரும் சூழலில், ஐஸ்வர்யா ராஜேஷ், மகேஸ்வரி சாணக்யன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலருக்கும் அழகுக் கலை ஆலோசகரா கவும் திகழ்கிறார் ரேகா வெங்கடேசன். இவரது மகன் 10ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதை நம்பத்தான் பலரும் தயங்குகிறார்கள்.