சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டிக்கான டிக்கெட்டை வாங்க இரவிலிருந்தே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர்.பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.