மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த திருமுருகன்என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருப்பதாவது: வேங்கைவயல் கிராமத்தில்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சிபிஐ-க்கு விசாரணையை மாற்றினால், அவர்கள் தங்களிடம் போதுமான மனிதவளம் இல்லை என்பார்கள். எந்த விசாரணை அமைப்புக்கு மாற்றினாலும், நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. மக்களும் காலப்போக்கில் மறந்துவிடுவர்.
கல்வியால் ஏற்படும் விழிப்புணர்வைக் கொண்டுதான், வேங்கைவயல் போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும். தமிழக போலீஸாரிடம் போதுமான மனிதவளம் உள்ளது. எனவே, வேங்கைவயல் வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி போலீஸார் அறிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.