கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைபிடித்தது. அவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 12 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில்,இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.