சென்னை: 12, 11 , 10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பின்னர் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது, ஏப்ரல் 24 முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக , 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஏப்ரல் 17ம் தேதி தேர்வுகளை தொடங்கி ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .