day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தலைமை செயலாளர்

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தலைமை செயலாளர்

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், பயிற்சித் துறையின் தலைவருமான வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வு நிறுவனம், ஆர்ஆர்பி ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியிலும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும் நடத்தப்படுகின்றன.
பயிற்சியில் சேர விரும்புவோர் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் (www.civilservicecoaching.com) வாயிலாக மார்ச் 15 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!