புதுடெல்லி : இந்தியாவில் விரைவு ரெயில் போக்குவரத்தின் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நாரி சக்தியால் (பெண் சக்தி) வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்..
மும்பையில் இருந்து புனே, சோலாப்பூர் வழியே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியாற்றுவார் என்றும் , வரலாற்றில் முதன்முறையாக பெண் ஓட்டுநர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.