day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மீடூ குறித்த விழிப்புணர்வை நீங்கள்தான் தான் ஆரம்பித்து வைத்தீர்கள். அதனால் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?

மீடூ குறித்த விழிப்புணர்வை நீங்கள்தான் தான் ஆரம்பித்து வைத்தீர்கள். அதனால் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?

மீடூ குறித்த விழிப்புணர்வை நீங்கள்தான் தான் ஆரம்பித்து வைத்தீர்கள். அதனால் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?

நான்தான் மீடூ பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வந்தேன் என்ற உணர்வு எனக்கு இல்லை. இந்தியா முழுக்க எத்தனையோ பெண்கள் சேர்ந்து கூடி ஒரே குரலாக ஒலித்ததுனால்தான் மீடூ இயக்கம் பற்றி இத்தனை பேர், இத்தனை நாள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மீடூ இயக்கம் மூலமாக கட்டாயமாக நன்மைகள் நடந்திருக்கின்றன. பாலியல் மீறல்கள் நடந்ததைப் பற்றிப் பேசினால், ’அசிங்கமாக அதைப் பற்றிப் பேசாதே,’ என்று சொல்லும் முறை மாறி, வரவேற்பறைகளில் டிவி தொடர் பார்க்கும்போதோ, பாடல் கேட்கும்போதோ, திரைப்படம் பார்க்கும்போதோ கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாலியல் வன்புணர்வு பற்றியும் வெளிப்படையாக விவாதிக்கிறார்கள்.  மீடூ மிகவும் அவசியமாக இருந்தது. மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இன்னமும் நிறைய நிகழும் என்பதுதான் என்னுடைய கருத்து.

பிரபலங்கள் பேசினால் மட்டும்தான் எடுபடுகிறதா?

பிரபலங்கள் பேசினால்தான் எடுபடுகிறதா என்பது ஒரு அம்சம்தான். அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படம் ‘பிங்க்’ மிகவும் பிரபலம் ஆனது. அதில் அவர் கூறுகிற, ‘நோ மீன்ஸ் நோ’ என்ற வசனம் மிகவும் பிரபலம் ஆனது. இங்கே தமிழில் அதே படத்தை அஜித்குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்று ரீமேக் செய்தார்கள். ஆனால் நம்முடைய பிற்போக்கு மன நிலை கொண்ட சூழலில் எதுவும் மாறவில்லை. நம்முடைய கலாச்சாரத்தில் பகுத்தறிவு, சமூக மாற்றம் என்றெல்லாம் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற மாநிலங்கள் மாதிரி, பெண்ணியம் பற்றி எல்லாம் பேசாமல் நம்முடைய சமூகம் இருந்ததில்லை. பெண்ணியம் பேசுகிற ஆண்களும் பெண்களும் இங்கு அரசியலில் இருந்திருக்கிறார்கள். பெண், அதிகாரம் பெறுவதற்கு ஆண்களும் பெண்களும் உழைத்திருக்கிறார்கள். ஒரு பெண் எந்த தொழிலில் இருந்தாலும் பரவாயில்லை, எந்த மாதிரி உடை போட்டிருந்தாலும் பரவாயில்லை, எந்த சமூக மட்டத்தில் இருந்தாலும் சரி, குடித்திருந்தாலும் பரவாயில்லை, அவள் ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் பரவாயில்லை, நோ என்று சொன்னால் நோ தான். பப்புக்கு, போகிற பெண்களை வேசி என்று எப்போது திரைப்படங்களில் பார்க்கத் தொடங்கினார்களோ, புதிய ஹீரோக்கள் அதை எப்போது கேவலப்படுத்தினார்களோ, அப்போதிருந்து நம்முடைய கலாச்சாரத்தில் இருந்த நல்ல அம்சங்கள் எல்லாம் கெட்டுத்தான் போய்விட்டன. அதை மாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். பிரபலங்கள் பேசினால் எடுபடுகிறதா என்பதைவிட இன்னும் நிறைய பிரபலங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்ன செய்வது?

 

இதனால் சாதாரண மக்களுக்கு துணிவு வந்திருக்குமா?

சாதாரண மக்களுக்கு கட்டாயமாக துணிவு வராது. பாடகியாக இருந்த எனக்கே துணிவு வருவதற்கு 15 ஆண்டுகள் ஆகும்போது, சாதாரண மக்களுக்கு துணிவு வரும் என்று நினைக்க நான் தயாராக இல்லை. எனக்கு சமூக ரீதியில் ஒரு அந்தஸ்து இருக்கிறது. கொஞ்சம் செல்வாக்கு கொண்டவர்களிடம் நான் உதவி கேட்க முடியும். ஆதரவு என்று ஒன்று எனக்கு வரும். அப்படி சாதாரண மக்களுக்கு ஆதரவோ, செல்வாக்கோ எப்படி இருக்கும்? அவர்களுக்கு நிச்சயமாக தைரியம் வராது. யாராவது சாதாரண மக்களிடமும் பாலியல் ரீதியில் மோசமாக நடந்துகொண்டால், அது இயல்பு என்று நினைக்காமல், மனதைக் கல்லாக்கிக்கொண்டு இருந்தவர்கள், அது ஒரு சுரண்டல் என்று நினைக்கிற ஒரு விழிப்புணர்வு இப்போது வந்திருக்கிறது. பெண்கள் இப்போதும் நிறுவனங்களின் புகார் அமைப்பிடம் சொல்ல பயப்படுகிறார்கள். வேலை போய்விடும், எதிர்காலம் போய்விடும் என்றெல்லாம் நினைக்கிறார்கள். எந்த ஆண் மோசமாக நடந்துகொண்டாரோ அவருடைய மனைவி மக்களின் வாழ்க்கை பாழாகிவிடும் என்றெல்லாம் நினைக்கிறார்கள். பாதிக்கப்படுபவர்களின் குடும்பப் பின்னணி என்ன, அவர்களின் பொருளாதார சூழ்நிலை என்ன என்பதைப் பொறுத்துத்தான் அவர்கள் இயங்க முடியும். காவல் துறையில் புகார் சொல்லவே சாதாரண வீட்டுப் பெண்கள் பயப்படுகிறார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். திருமணம் ஆகாத பெண்களுக்கு எப்படித் திருமணம் ஆகும் என்ற கவலை வந்துவிடுகிறது. இப்படிப் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. சாதாரண மக்களுக்குத் துணிவு வந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக விழிப்புணர்வு வந்திருக்கிறது.

 

மீடூ புகார் கொடுத்தால் பெண்களைச் சந்தேகிக்கிறார்களே.

மீடூ புகார் மட்டும் இல்லை, வன்புணர்வு போன்ற எந்த அம்சங்களாக இருந்தாலும் பெண்களை சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள். இந்தியாவில் மட்டும் இல்லை. உலகம் எங்கும் அதுதான். பெண்களுக்கான சட்டங்கள் இருந்தாலும், பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். வரதட்சணை சாவுகள் இன்னும்கூட நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  பெண் சிசுக் கொலைகள் இன்னும் நடக்கின்றன. கர்ப்பத்திலேயே பெண் சிசுவைக் கொல்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டங்கள் நன்றாகவே இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். கருவில் இருப்பது பெண் சிசு என்றால், பிரசவம் நடக்கவில்லை என்றால், ஏன் நடக்கவில்லை என்று விசாரணை செய்ய வேண்டும் என்ற அளவுக்கு சட்டங்கள் இருக்கிறதாம். மீடூ போன்றவை நடந்தால், என்ன பண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று எளிதாக ஆண்கள் கேட்டுவிடுகிறார்கள். பாலியல் துன்புறுத்தல்கள் என்பதை அனுபவித்தால் ஒழிய ஆண்களுக்குப் புரிவதில்லை. அதைப் புரிந்துகொள்கிற ஆண்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அல்லது அவர்களே அது போன்ற கொடுமைகளைக் கண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் சாட்சியே இல்லை என்பதும் அவர்களுக்குப் புரிகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதை நாம் போகப் போகப் பார்க்க வேண்டும். இது போன்ற குற்றங்களின் இயல்பு என்னவென்றால், இதற்கு சாட்சிகள் இருக்காது. வன்புணர்வு நடந்தால்கூட, சரியான நேரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட பெண் சரியான நேரத்தில் காவல் நிலையம் செல்வதில்லை.  பலவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. சூழலின் சாட்சியங்களை வைத்துத்தான் வன்புணர்வு தொடர்பான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. வன்புணர்வு செய்பவர்கள் தண்டிக்கப்படுவது இந்த நாட்டில் மிகவும் குறைவு. வழக்குகள் பதிவு ஆகலாம். ஆனால் தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவு. நிர்பயா வழக்கில் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 27 ஆண்டுகள் கழித்து பவானி தேவி கூட்டு வன்புணர்வு வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை.

 

உங்களையும் சந்தேகக் கண்ணோடுதானே பார்க்கிறார்கள். இதை மாற்ற முடியுமா?

சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் எல்லோரும் பார்ப்பார்கள். நான் உண்மை சொல்கிறேனா, பொய் சொல்கிறேனா என்று மற்றவர்கள் நினைப்பது பற்றி எனக்கு மனக்கஷ்டம் இருந்தாலும், மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்னை நம்புகிறார்களா, இல்லையா என்று கவலைப்படுவதை நான் நிறுத்திக்கொண்டேன். மற்றவர்களின் கருத்தினால் என் உண்மை பொய் ஆகிவிடாது. இதனால் நான் உறுதியானவளாக மாறினேன்.

 

பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் காரணம் என்கிறார் பாக்யராஜ். அதில் உண்மை இருக்கிறதா?

 

பாக்யராஜ் மட்டும் இல்லை, பிரேமலதா விஜயகாந்த்கூட இதே விஷயத்தைத்தான் மீடூவில் கூறினார். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று அவர் கூறினார். இவர்கள் இரண்டு பேரையும் அழைத்து வந்து கேட்க வேண்டும். சின்னக் குழந்தைகளை வன்புணர்வு செய்கிறார்களே, வயதான பெண்களை வன்புணர்வு செய்கிறார்களே, அந்தப்  பெண்கள்தான் அதற்கு இடம் கொடுத்தார்களா? பிரபலங்கள், அரசியல்வாதிகள் பேசுவதால் வன்புணர்வுக்குக் காரணம் என்ன என்பது காணாமல் போகிறது. வன்புணர்வு, ஆசையினாலோ, காமத்தினாலோ நடக்கும் குற்றம் அல்ல. இது வன்முறை தொடர்பான குற்றம் என்று இவர்களுக்கு எப்போது புரிகிறதோ அப்போது இவர்கள் பேசினால் நன்றாக இருக்கும். அதுவரை இவர்கள் இவர்களின் அறிவு முத்துக்களை சிதற விடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

 

திரைப்படத் துறையினருக்கு பெண்கள் தொடர்பான கீழான பார்வை இருக்கிறது. இதை மாற்ற முடியுமா?

திரைப்படத் துறையில் மட்டும் இல்லை. எல்லா துறையிலும் பெண்கள் தொடர்பான கீழான பார்வை இருக்கிறது. பெண்களைப் பற்றி மற்ற பெண்களே கீழான பார்வையில்தான் பார்க்கிறார்கள். இந்த மாதிரி இருந்தால் நல்ல பெண், அந்த மாதிரி இருந்தால் மோசமான பெண் என்று பெண்களை பெண்களே இழிவாகப் பேசுகிற இந்த சமூகத்தில், ஆண்கள் பெண்களைத் தவறாகப் பார்க்கிறார்கள் என்று எதற்குச் சொல்ல வேண்டும்? சமூகத்தில் இருப்பதுதான் கலையில் வெளிப்படுகிறது. சமூகத்தில் இருப்பதை திரைத்துறையினரும் பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

நீங்கள் புகாரோடு நிறுத்திக்கொண்டீர்கள். ஆனால் ஒரு சமூக செயற்பாட்டாளராக மாறவில்லையே. ஏன்?

நான் புகாரோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தில் நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அவர்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு மூன்று அல்லது நான்கு நினைவுபடுத்துதல் அறிக்கைகளை அனுப்பிவிட்டார்கள். அதற்குப் பிறகும் விசாரணை நடக்கவில்லை. வைரமுத்து ஐயா, எல்லா பத்திரிகையாளர்களிடம், எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள், மீடூ பற்றி மட்டும் கேட்க வேண்டாம் என்று கூறுகிறாராம். பத்திரிகையாளர்களும், அவருடைய வேண்டுகோளுக்கு அல்லது கட்டளைக்கு இணங்கி, மீடு பற்றி கேள்விகள் கேட்பதில்லை. இது ஊடகங்களின் ஒரு தோல்விதான். புகாரை முன் வைத்தது நான் மட்டும் இல்லை. என்னை பாஜகவின் கைக்கூலி, மண்ணாங்கட்டியின் கைக்கூலி என்றெல்லாம் கூறினார்கள். இன்னும் ஏழு பேர் இதே போன்ற புகார்களைக் கூறினார்கள். ஆனால் வைரமுத்து மீது நன்கு வெள்ளை அடித்து மறக்கடித்துவிட்டார்கள். இந்த அம்சங்கள் என் வாழ்வு முழுவதும் தொடரும். கடவுள் எனக்குக் குரல் கொடுத்தது, பாடுவதற்கு மட்டும் இல்லை. சரியான விஷயங்களைப் பற்றிப் பேசவும்தான்.

 

உங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதற்கு அரசியல் ஒரு தளமாக இருக்கும் என்று நீங்கள் எண்ணவில்லையா? அரசியலுக்கு வந்தால் சாதிக்க முடியும் என்று நினைக்கவில்லையா?

அரசியல் எப்படி ஒரு தளமாக இருக்கும்? எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், வன்புணர்வு புகார், பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளுதல், இழிவாகப் பேசுதல் போன்ற புகார்கள் கொண்டவர்கள்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நான் எந்த அரசியல் கட்சியில் போய்ச் சேர்வது? புதிதாக ஒரு அரசியல் கட்சி தொடங்கினால் இதெல்லாம் உருப்பட ஒரு வாய்ப்பு இருக்கிறது. பாருங்கள் ராதாரவியை? திமுக, அதிமுக என்று சுற்றி பாஜகவில் சேர்ந்துவிட்டார். பாஜகவில் குல்தீப் செங்கார் வழக்கு ரொம்ப நாளாக நடந்துகொண்டிருக்கிறது. உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கும் வெகு நாட்களாக நடந்துகொண்டிருக்கிறது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், ரேப், வன்புணர்வு, கொலை, கொள்ளை என்ற செயல்கள்தான் இருக்கின்றன. இதில் ஒன்றில் சேர்ந்தால், என்னைப் போய் ரேப் செய்துவிட்டால் என்ன செய்வது? ஐய்யய்யோ, தேவையே இல்லை எனக்கு இது. அரசியல் என்பது ஒரு தளமே இல்லை. பாகிஸ்தானின் இளம்பெண் மலாலா, அரசியலில் சேர்ந்து மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. என்னால் ஒரு மாதத்தில் ஒருவருக்கு உதவி செய்து, அவர்கள் ஒரு வழக்கைத் தொடர ஆதரவு கொடுக்க முடிந்தால் அது போதும். இந்த நாட்டின் ஒரு குடிமகள் என்ற வகையில் நான் நிச்சயமாக அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்பேன். எந்த ஒரு அரசியல்வாதியும் இதற்கெல்லாம் பதில் சொல்வது போலத் தெரியவில்லை. இவர்கள் இதேபோல், பெண்களை வன்புணர்வு செய்பவர்கள் போன்றவர்களை வைத்துக்கொண்டு கும்தலக்கடி செய்துகொண்டு இருக்கிறார்கள். நாம் இவர்களை கேள்வி கேட்டால் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். அவ்வளவுதான்.

 

பெண்களை அடிமைப்படுத்தும் விதமான பாடல்களைப் பாடும்போது எப்படி உணர்வீர்கள்?

பெண்களை அடிக்கிறேன், குத்தறேன், உன் கையில் செத்துப் போகிறேன் என்ற அளவுக்கு பாடல்கள் என் கைக்கு வந்ததில்லை. மிகவும் கேவலமாக பாடல் வரிகள் இருந்தபோது, இரண்டு மூன்று முறை நான் பாட மாட்டேன் என்று சொல்லி வெளியே வந்திருக்கிறேன். உணர்வு நிலைக்கும், பாலியலுக்கும், ஆபாசத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. காதல், அல்லது காமம், காதலும் காமமும் சேர்ந்த பாடல்கள் வரும்போது, காமமே தவறு என்று நான் நினைப்பதில்லை. செக்ஸ் பற்றி எல்லோரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இந்தியாவின் மிகப் பெரிய வேலையே செக்ஸாகத்தான் இருந்திருக்கும். அதனால்தான் நம்முடைய மக்கள்தொகை இவ்வளவு இருக்கிறது. மின்சாரம், தொலைக்காட்சி, இண்டர்நெட் வராத காலத்தில், அவை இல்லாத இடங்களிலும் மக்கள் குழந்தை பெற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். மக்களின் ஒரு சிறந்த பொழுதுபோக்கு செக்ஸ்தான். செக்ஸும், சென்சுவாலிட்டியும் ஒரு பிரச்சினை இல்லை. வன்முறையும், செக்ஸும்தான் ஒரு பிரச்சினை. பாலியல் வன்முறை பற்றிப் பேசும்போது இந்த வேறுபாடு பற்றியும் பேச வேண்டும். பலருக்கு டேட்டிங்குக்கும், பாலியல் சீண்டலுக்கும் வேறுபாடு தெரியாமல் இருக்கிறார்கள். வேலை தேடி பலர் சிறிய ஊர்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் சென்னைக்கு வருகிறார்கள். எல்லோரும் ஒரே தமிழ்நாடு, தமிழ் கலாச்சாரம் என்று சொன்னால் கூட, ஒருவருக்கு மற்றவர் மீது, ஒரு ஆணுக்கு பெண் மீதும், ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும், ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அந்த நபரை எப்படி அறிந்துகொள்வது என்ற ஆர்வம் வந்துவிடுகிறது. ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணிடம், ‘உன்னிடம் எனக்கு ஈர்ப்பு இருக்கிறது, உன்னைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்,’ என்று சொல்லலாம். மானுடவியல் ரீதியில் பார்க்கும்போது ஒருவர் எதிர்பாலை நாடுவது என்பது இயல்பானதுதான். மனித உடல் எதிர்ப்பாலின உடலை நாடுவது எதார்த்தாம். இதனால்தான் இனப்பெருக்கம் ஏற்படும். ஒரு பெண்ணிடம் ஆண் பேசும்போது, பெண் பேசவே கூடாது என்று சொல்வதால்தான் இத்தனை இயற்கைக்கு மாறான விஷயங்கள் நடக்கின்றன. ஒரு பெண்ணிடம் ஒரு இயல்பான மனிதர் போல ஒரு ஆண் பேசலாம். அந்தப் பெண் இல்லை என்று கூறிவிட்டால், அதை கௌரவமாக எடுத்துக்கொண்டு கடந்து போகலாம். அதே போல ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் பிடித்திருக்கிறது என்று சொல்வதால் தவறு இல்லை. டேடிங், லைகிங், ஹாரசிங் என்று வேறுபாடுகள் புரிய வேண்டும். இது எப்போது எல்லை தாண்டுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு வேலை இடத்தில் ஒரு அதிகாரி, தன்னை ஒரு பெண் திருப்திப்படுத்தினால்தான் வேலை என்று சொல்கிற போது அது வேலையிடத்தின் வன்முறையாக மாறுகிறது. ஒரு ஆசிரியர் மாணவரிடமும், ஒரு அலுவலக ஊழியர் மற்ற ஊழியரிடம் பேசும்போதுதான் தெளிவு கிடைக்கும். உணர்வு மேலோங்கி இருப்பதற்கும் ஆபாசத்திற்கும் திரைப்படப் பாடல்களில் வேறுபாடு இருக்கிறது. எனக்கு சில வரிகள் பிடிக்கவில்லை என்றால், பாடலாசிரியர்கள் மாற்றுவதற்கு தயாராக மாட்டார்கள். வரிகள், இயக்குனர்களாலும், பாடலாசிரியர்களாலும்தான் நிர்ணயிக்கப்படுகின்றன.

 

நீங்கள் எத்தனை பாடல்களைப் பாடியிருக்கிறீர்கள்.

நான் எட்டு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறேன்.

 

உங்கள் சாதனை இலக்கு எது?

என் துறையில் இன்னும் நான் நிறையப் பாடல்களைப் பாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் மீடு புகார் கூறியதால் என்னைத் தடை செய்து வைத்திருக்கிறார்கள். பார்ப்போம் என் தலையெழுத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறது என்று பார்ப்போம். நான் என்ன ஆசைப்படுகிறேன் என்று எனக்கே இப்போதெல்லாம் தெரியவில்லை.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!