அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாம் நாள் ஆட்டத்தை 36 ரன்கள் உடன் தொடங்கியது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா,35 ரன்களிலும், பின்னர் வந்த புஜாரா 121 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
சுப்மன் கில் சதம்: 194 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து சதம் பதிவு செய்து இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தினை பதிவு செய்துள்ளார். மூன்றாம் நாள் ஆட்ட தேநீர் நேர இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 292 ரன்கள் இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.