சென்னை : கட்டுமானங்களுக்கு ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதன் அடிப்படையில், எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போதுமான சலுகைகள் வழங்கி அதனை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், எம்-சாண்டுக்கான புதிய கொள்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மேலும், இதன் மூலம் எம்-சாண்ட் உற்பத்தி செய்வதற்கான தனிப்பட்ட குவாரி குத்தகைகள் வழங்கப்பட மாட்டாது. செயற்கை மணல், அரவை மணல் உற்பத்திக்கு தனிப்பட்ட குவாரி குத்தகைகள் வழங்கப்பட மாட்டாது எனவும், செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவற்கான புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மணல் விற்பனை விலை குறித்த அறிவிப்புகள் புதிய கொள்கையில் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கட்டுமானங்களுக்கு தேவையான எம்-சாண்ட் தடையில்லாமல் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.