சென்னை: சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள எஸ்.ஸ்ரீமதி, டி. பரத சக்கரவர்த்தி, ஆர்.ஜெ.விஜயகுமார், முகமது ஷபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி ஐந்து பேரும் விரைவில் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.