சென்னை : தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை ,கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியதாவது , வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.பிரச்சனையை யாரேனும் வீடியோக்களைசைபர் கிரைம் மூலம் தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம் . என தெரிவித்துள்ளார்.