பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையிலும் கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றும் வலைத்தளத்தில் வதந்திகள் பரவி வந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘மேக்கிங்’ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அதில் ஏப்ரல் 28-ல் படம் ரிலீசாவதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். பாடல் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வருகிற 29, 30 அல்லது ஏப்ரல் 5 ஆகிய 3 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் 6 பாடல்கள் இருக்கும்.மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.