சென்னை : ஈரோடு வெங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவன் என்பதன் சுருக்கமே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரனும், திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கும்போது அண்ணாவுக்கு பக்கபலமாக இருந்த சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத்தின் மூத்த மகன் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
2021 சட்டப்பேரவை தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். ஜனவரி 4-ம் தேதி திருமகன் ஈவேரா மறைந்ததால், இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட் நிலையில், எண்ணப்பட உள்ள வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளதால் தற்பொழுது வெற்றி உறுதியாகியுள்ளது. இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதன்மூலம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 34 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் என்பது குறிப்பிடதக்கது.