புதுடெல்லி: ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது: பொருளாதரத்தில் தற்பொழுது ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் , உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். 2047-ம் ஆண்டில் அமெரிக்கா இன்று இருக்கும் நிலையை நாம் அடைவோம். 140 கோடி இந்திய மக்கள் ஒன்று சேர்ந்து நமது பொருளாதாரத்தை 30-40 லட்சம் கோடி டாலர்களாக மாற்றப் போகிறார்கள்.
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (ஆர்சிஇபி) வர்த்தக ஒப்பந்தம் பேரழிவை உருவாக்கும் கூட்டணி என்றும் அதில் இந்தியா இணையாது என்றும் பிரதமர் மோடி கூறியபோது அந்த செய்தி எனக்கு இனிமையை தந்தது. நீதிமன்ற மேல்முறையீடு, ஜனநாயகம் அல்லது சட்ட விதிமுறைகள் இல்லாமல் ஆர்சிஇபி-யில் சேருவதால் அது பேரழிவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு சிலரைத் தவிர அந்த கூட்டாண்மையில் இணைய யாரும் சொன்னதாக நினைவில்லை என்று கூறியுள்ளார்.