தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் இன்று சிவரத்திரி பூஜை கொண்டாடப்படும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே வருஷ சிவராத்திரி என்றும், மாசி மகாசிவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. மாசி மாத தேய்ப்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரி ஆகும். சிவராத்திரி பண்டிகையை ஒட்டி சிவாலயங்களில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. இன்று சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் இரவுகளில் சிவாலயங்களுக்கு சென்று விடிய, விடிய நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பார்கள்.