சென்னை : ஐபிஎல் 2023 தொடருக்கான பட்டியல் வெளியாகி உள்ளது . ஐபிஎல் முதல் தொடர், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் சென்னை அணியோடு குஜராத் அணிகள் மோதுகின்றனர். இதன் இறுதிபோட்டி மே 21-ம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் 2023 தொடரில் 70 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் 18 போட்டிகள் டபுள் ஹெட்டர்களாக உள்ளது.
இம்முறை ஐபிஎல் போட்டிகள் பழைய முறைப்படி சொந்த மைதானத்தில் 7 போட்டிகளும், பிற மைதானங்களில் 7 போட்டிகளும் விளையாடுகின்றன. மொத்தம் 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் 1: மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ குரூப் 2: சென்னை, ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுஹாத்தி, தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளனர்.