சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும்அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில்இளநிலை, முதுநிலை படிப்புகளில்சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறைகடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பரவலால் தமிழக மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதன் காரணமாக க்யூட் தேர்வுக்குத் தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்நிலவுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி நாகராஜன் கூறுகையில்:- “தமிழக மாணவர்களுக்கு மட்டும் க்யூட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்கும் பகுதி மறைக்கப்படும். தமிழ்நாடு என்ற காலத்தை அவர்கள் பூர்த்திசெய்ததும், மதிப்பெண் விவரங்கள் கேட்கப்படாது.
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை இயக்குநரிடமும் தகவல் தெரிவித்துவிட்டோம்” என்றார். க்யூட் நுழைவுத் தேர்வுக்கு பிளஸ்-2 பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.