வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் கூகுள் தேடுதல் தளத்தில், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம் ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது.சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அனைவரையும் கவரும் வகையில் புதிய டூடுல்-ஐ வெளியிட்டுள்ளது.